Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"பிச்சைக்காரியை" கூட விட்டு வைக்கவில்லை இந்தக் காமக்கொடுரர்கள்

•On May 9, 2017
rape
Share
rape நம் நாட்டில்தான் கலாச்சாரம் பத்தி அதிகம் பேசுகிறோம் அதே போன்று நம் நாட்டில்தான் அக்கலாச்சாரம் கெடும் அளவிற்கு மிக கேவலமாக நடந்துள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கண்ணுப்பொத்தை பகுதியில் நடந்த கொடூர பலாத்காரம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி (63) என்பவர் ஜெயப் கூட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பழக்கப்பட்ட ஒருவரால் கண்ணுப்பொத்தை காட்டுப்பகுதிக்கு கடத்தப்பட்டார். அங்கு வயதான மூதாட்டி என்றுகூட பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு தனது நண்பர்களையும் வரவழைத்து வீரலட்சுமியை சின்னா பின்னமாக்கியுள்ளனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு வீரலட்சுமியை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 2 பேர் 17 வயதுக்குட்ப்பட்ட சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கூடங்குளத்தைச் சேர்ந்த சில பிச்சைக்காரப் பெண்களும் பலியாகியுள்ளனராம். இதுவரை வீரலட்சுமி உள்பட 5 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். சிறுவர்களின் இந்த கொடூரச் செயல் கன்னியாகுமரி மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.