பாலிவுட் நடிகை " ரீமா லாகூ" மரணம்...

அம்மா என்ற கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தும் நடிகையில் ஒருவரான ரீமா லாகூ. இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கானுக்கு அம்மாவாக நடித்தவர ரீமா.
இந்நிலையில், திடீரென நேற்று நள்ளிரவில் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மும்பையில் கோகிலாபென் மருத்துவமனையில் ரீமா அனுமதிக்கப்பட்டார். சுமார் 2 மணி நேர தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ரீமாவின் மரணம் குறித்த மருத்துவ அறிக்கையை அவரது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய பின் வெளியிடுவதாக மருத்துவமனை நிர்வாக அதிகாரி ராம் நாராயண் தெரிவித்துள்ளார். எவ்வித உடல் உபாதைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த ரீமா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஜொலித்த ரீமா, 'ஹம் ஆப்கே ஹைன் கவுன்', 'ஹம் சாத்-சாத் ஹைன்', 'மெய்னே பியார் கியா', 'கல் ஹோ ந ஹோ', 'குச் குச் ஹோத்தா ஹை' உள்ளிட்ட படங்களில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை சிறந்த துணை நடிகைக்கான 4 ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ள ரீமா, தனது மக்கள் மிருன்மாயியுடன் வசித்து வந்துள்ளார். தற்போது, ரீமாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
