Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பாலியல் புகார் : ஸ்ருதி ஹரிஹரனுக்கு புதிய பட வாய்ப்புகள் வருவதில் சிக்கல்..!

•On December 14, 2018
Sruthi-Hariharan
Share

சினிமா துறையில் நடிக, நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக எழுந்துள்ள "மீட்டூ" இயக்கம் மூலம் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் தீண்டல்கள் குறித்து பேசி வருகின்றனர்.

அவர்களுள் ஒருவரான நடிகை ஸ்ருதி ஹரிஹரன், தனது பாலியல் குற்றச்சாட்டுக்கு பின் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். தமிழில் நிபுணன் திரைப்படத்தில் நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன்.இவர் அத்திரைப்பட படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜுன் தன்னுடன் தவறாக நடந்து கொண்டதாக பகிரங்க குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் அர்ஜுன், ஸ்ருதி மீது வழக்கு தொடர்ந்தார்.இதனையடுத்து தான் நடிக்க இருந்த மூன்று படங்களில் படக்குழு தன்னை நீக்கி விட்டதாகவும், புதிய பட வாய்ப்புகள் வருவதில்லை எனவும் மனம் வருந்தி இருக்கிறார் ஸ்ருதி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.