பாலியல் தொழிலாளியாக நடிக்கும் ஜெயம் பட கதாநாயகி

ஜெயம் படத்தில் அறிமுகமான சதா போய்யா... போ... போ என்ற ஒற்றை வரி வசனத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, தமிழில் 50 படங்களுக்குமேல் நடித்து விட்டார். ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். எவ்வளவு வேகமாக வளர்ந்தாரோ அவ்வளவு வேகமாக கீழேயும் இறங்கினார்.
புலிவேஷம் என்ற படத்தில் ஆர்கேயுடனும் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தமிழில் மதகஜராஜா படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது அவர் 'டார்ச் லைட்' என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜேவி இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
இது பற்றி இயக்குனர் அப்துல் மஜீத் கூறியதாவது:-
பாலியல் தொழிலுக்கு எந்த பெண்ணும் விரும்பி வருவதில்லை. வறுமையாலும், துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் அதற்குள் தள்ளப்படுகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
