Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் வரலட்சுமி..!

•On July 6, 2018
Varalakshmi-Sarathkumar-2
Share
ஜே.கே இயக்கும் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற பெண்ணாக நடிப்பதாக ட்வீட் செய்துள்ளார். கோலிவுட்டில் சிம்புவுடன் போடா போடி படம் மூலமாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடினமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் இவருக்கு செம பெயர் வாங்கி கொடுத்தது. இந்நிலையில் இவர் தனது அடுத்த படம் பற்றி ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறாராம். ஜே.கே இயக்கும் இந்த படத்தை சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசையமைக்கிறார். வரலட்சுமி நடிப்பில் சண்டக்கோழி-2 ரிலீசுக்கு தயாராக உள்ளது. விஜய்யின் சர்க்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி, முற்றிலும் மாறுபட்ட வெல்வெட் நகரம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.