பாபி சிம்ஹாவுடன் நடிக்கும் மணிரத்னம் பட நாயகி..!

இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மதுபாலா. இவர் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது. அதன்பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மதுபாலாவுக்கு கிட்டியது.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் மதுபாலா நடித்த ஜென்டில் மேன் படமும் மாஸ் ஹிட்டை அடித்தது. தற்போது பாபி சிம்ஹா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மதுபாலா நடிக்கவிருக்கிறார்.
மணிரத்னம், ஷங்கர் படத்தின் நாயகியான நடிகை மதுபாலா அடுத்து நடிக்கும் படம் அக்னி தேவ். இதனை அந்த படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. அக்னி தேவ் படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தினை சென்னயைில் ஒருநாள் 2 படததின் இயக்குனர் ஜே.பி.ஆர் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்க உள்ளார்கள். அதோடு எஸ்.டின் ஆட்டம் விரைவில் தொடங்கும் என்ற ஒரு குறிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
