Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"பாக்ஸர்" படத்தில் அருண் விஜயுடன் ஜோடி சேரும் இறுதிச் சுற்று நடிகை..!

•On May 17, 2019
D6bdU0qUwAAFjFm
Share
அருண் விஜய் சமீபகாலமாக நல்ல கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதனால் வெற்றியும் அடைந்து வருகிறார், இவர் நடித்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சஸ்பென்ஸ் படமான தடம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார், மேலும் திரைப்படம் நீண்ட நாட்களாக ஓடி வெற்றி பெற்றதுடன் வசூலிலும் கல்லா கட்டியது. மேலும் அருண் விஜய் சகோ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலை இவர் இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்சிங் மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு பாக்ஸர் என பெயர் வைத்துள்ளார்கள்.
படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் கமிட்டாகியுள்ளார், இவர் இறுதிச் சுற்றுப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.