பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்..!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம்.
பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ள 2.0 படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. ஒட்டுமொத்த இந்தியாவே இந்த படத்திற்காக காத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.
உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வருவதால் பிரமாண்ட வசூல் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிலும் 2.0 படம் 29 தேதியே வெளியாகிறதாம். படம் இன்னும் சென்சார் செய்யப்படாத நிலையில் அங்கு வரும் நாளிதழ்களில் 2.0 ரிலீஸ் பற்றி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
அக்ஷய் குமாருக்கு அங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பதால் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
