பாகவதருக்கும் பிரேம்ஜிக்கும் என்ன சம்பந்தம்..?

பிரேம்ஜியை ஒரு படத்தின் கதாநாயகனாக, அதிலும் ஒரு விஞ்ஞானியாக கற்பனை பண்ணி பாருங்கள்.. முடியவில்லையா..? கவலையில்லை.. இதை திரையில் நீங்கள் பார்க்க தான் நடித்துவரும் ‘மாங்கா’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் பிரேம்ஜி.
விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல.. ஆனால் அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள், பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. இதைவைத்து காமெடியாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் ராஜா. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார்.. படத்தின் இசையும் பிரேம்ஜி தான். பாடல்களை கங்கைஅமரன், சினேகன் ஆகியோர் எழுதிருக்கிறார்கள். விரைவில் ஆடியோ ரிலீஸ் நடைபெற இருக்கிறது.
ஒரு முறை அவர் பாகவதர் ஒருவரை சந்திக்கிறார். அவர் 1950ஆம் ஆண்டு கால கட்டத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே ஒரு நட்பு உண்டாகிறது. அந்த நட்பு நிலைத்ததா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்லியிருகிறார்களாம்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
