பல வண்ணங்களில் 200 ரூபாய் நோட்டு... தீபாவளி ரிலீஸ்!

புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை தீபாவளி பண்டிகை முதல் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பணமதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டன. பணமதிப்பு நீக்கும் நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன.
புதிய 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளில், சில மாற்றங்களுடன் புதிய வடிவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒரு ரூபாய் நோட்டும் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்பட்டது.
500 ரூபாய் நோட்டு 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை அடுத்து தற்போது 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த மாதமே தெரிவித்தது.
இதனையடுத்து கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில், 200 ரூபாய் நோட்டுகள் ஜூலை மாதம் முதல் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த 200 ரூபாய் நோட்டுகள் தீபாவளி முதல் புழக்கத்துக்கு வர உள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமணிமண்டபத்துக்கு போய்ச்சேர்ந்த சிவாஜி சிலை !
