Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"பத்மாவாத்" திரைப்படம் திரையிட எதிர்ப்பு திரையரங்கம் சூறை..

•On January 18, 2018
5a55bac329449-IBCTAMIL
Share
5a55bac329449-IBCTAMIL பாலிவுட் நடிகை தீபிகாபடுகோனே, ஷாகித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவாத் படத்திற்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. தடையை சுப்ரீம் கோர்ட்நீக்கியுள்ளது. ராஜபுத்திர ராணியின் வரலாற்றை திரித்து கூறியதாக பல கட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. சென்சார் போர்டும் தணிக்கை சான்று அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. இதனால் வரும் 25-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஹார் மாநிலம் முஷாபர்பூரில் பத்மாவாத் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்த கர்னி சேனா அமைப்பினர் திரண்டு வந்து தியேட்டர் மீது தாக்குதல் நடத்தி பேனர்களை நொறுக்கினர். படத்தை திரையிட கூடாது என கோஷம் எழுப்பினர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.