Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து? இன்று இரண்டாவது டி-20!

•On November 4, 2017
4a0dbba2-4802-49fe-8e4e-407f14de8c3b
Share

4a0dbba2-4802-49fe-8e4e-407f14de8c3b

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை எளிதாக வென்ற இந்தியா இந்த டி20 போட்டியிலும் பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும் என்பதால் இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  , இதற்கு முந்தைய டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளதால் இந்தப்போட்டியில் அந்த தங்கள்து ஆட்டத்தை ஆக்ரோசமாக வெளிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 66c4281f-7827-4438-a66f-17595f548dce பேட்டிங் வரிசையில் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, பாண்டியா, தோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்தியாவுக்கு பிளஸ்ஸாக உள்ளது. அதேபோல் பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்குமார், சாஹல், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.  , இதேபோல் நியூசிலாந்து அணியை பொருத்தவரையில் முண்ட்ரோ, மார்ட்டி கப்தில், கேப்டன் வில்லியம்சன், லாதம் ஆகியோர் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள். சவுதி, பவுல்ட், சாண்ட்னெர் ஆகிய பவுலர்களும் திறமை வாய்ந்தவர்கள். நியூசிலாந்து அணியும் தொடரை இழந்துவிடாமல் இருக்க முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.