பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு...

பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
முஸ்லீம் பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவது அதிகம். இந்நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் பரிசு வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஷாதி ஷகுன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் ஸ்காலர்ஷிப் பெறும் பெண்களுக்கு மட்டும் பொருந்தும்.
ஷாதி ஷகுன் திட்டம் குறித்து மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் விரைவில் புதிய இணையதளத்தை துவங்கி தேவையான தகவல்களை அளிக்க உள்ளது.
முஸ்லீம் பெண்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவில் படிப்பதை ஊக்குவிக்கவே இந்த புதிய திட்டம் என்று மவுலானா ஆசாத் எஜுகேஷனல் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
