பகடி ஆட்டம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்: இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடார்

ராம் கே.சந்திரன் இயக்கத்தில் ரகுமான் நடித்துவரும் படம் 'பகடி ஆட்டம்'. இப்படத்தை குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
இப்படம் குறித்து இயக்குனர் ராம் கே.சந்திரன் கூறும்போது,
‘எல்லா வசதியும் கொண்ட ஒரு ஆணுக்கும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வாழும் பெண்ணுக்கும் இடையேயான கதைதான் ‘பகடி ஆட்டம்’. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் எப்படி பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். சமூக வலைதளம் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை துப்பறிந்து வெளிச்சத்துக் கொண்டுவரும் கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
