நேர்மையை தவறவிடாத பொய்யாமொழி! பரிசளித்த ரயில்வே கோட்ட மேலாளர்.

பெரும் பணத்தையும் கண்டு மனம் தடுமாறாத இம்மாதிரி எளிய மனிதர்கள் இருக்கும்வரை மனித நேயம் சாகாது என்பார்கள் அதற்கு உதாரணமாய் திகழ்ந்திருக்கிறார் பொய்யாமொழி.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.5.75 லட்சத்தை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த சுமைத் தூக்கும் தொழிலாளி பொய்யாமொழியை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி நேற்று நேரில் சந்தித்து பாராட்டினார்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் கடந்த 1-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது நடைமேடையில் யாருமற்ற நிலையில் பை ஒன்று கிடந்ததை அவ்வழியாக வந்த ரயில்வே சுமைத் தூக்கும் தொழிலாளியான பொய்யாமொழி கண்டெடுத்தார். அந்த பையை திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதையடுத்து, அவர் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (ஆர்பிஎஃப்) தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆர்பிஎஃப் அதிகாரிகள், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலில் இருந்த பயணி இதை தவறவிட்டிருக்கலாம் என கருதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதேபோன்று பணத்தை தவறவிட்ட பயணி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்குள்ள ஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அப்போது அவருடைய பை தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பயணி தவறவிட்ட 5 லட்சத்து 75 ஆயிரத்து 720 ரூபாயை பத்திரமாக ஒப்படைத்தனர். மகிழ்ச்சியடைந்த பயணி, பொய்யாமொழிக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதை ஏற்க மறுத்த பொய்யாமொழி, இது தமது கடமை என பயணியிடம் கூறினார்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி, பொய்யாமொழியை சந்தித்து அவருடைய நேர்மையை பாராட்டினார். மேலும், அவருக்கு நினைவுப் பரிசாக ரயில்பெட்டி மாதிரி ஒன்றை வழங்கினார். இதற்கு முன்பு, வீட்டில் தகவல் தெரிவிக்காமல் ஓடிவந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர்களிடம் பொய்யாமொழி பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் கடந்த 1-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது நடைமேடையில் யாருமற்ற நிலையில் பை ஒன்று கிடந்ததை அவ்வழியாக வந்த ரயில்வே சுமைத் தூக்கும் தொழிலாளியான பொய்யாமொழி கண்டெடுத்தார். அந்த பையை திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதையடுத்து, அவர் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (ஆர்பிஎஃப்) தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆர்பிஎஃப் அதிகாரிகள், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலில் இருந்த பயணி இதை தவறவிட்டிருக்கலாம் என கருதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதேபோன்று பணத்தை தவறவிட்ட பயணி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்குள்ள ஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அப்போது அவருடைய பை தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பயணி தவறவிட்ட 5 லட்சத்து 75 ஆயிரத்து 720 ரூபாயை பத்திரமாக ஒப்படைத்தனர். மகிழ்ச்சியடைந்த பயணி, பொய்யாமொழிக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதை ஏற்க மறுத்த பொய்யாமொழி, இது தமது கடமை என பயணியிடம் கூறினார்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி, பொய்யாமொழியை சந்தித்து அவருடைய நேர்மையை பாராட்டினார். மேலும், அவருக்கு நினைவுப் பரிசாக ரயில்பெட்டி மாதிரி ஒன்றை வழங்கினார். இதற்கு முன்பு, வீட்டில் தகவல் தெரிவிக்காமல் ஓடிவந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர்களிடம் பொய்யாமொழி பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
