நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி

"நெஞ்சம் மறப்பதில்லை" இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருக்கும் படம். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஒரு இடைவேளைக்குப் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார்.
செல்வராகவனுக்கு என்றே இது தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வந்ததிலிருந்து படம் எப்போது வருமென காத்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சென்சார் உடபட படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டன. தயாரிப்பாளர் சரியான நேரத்தை தேர்ந்தெடுக்கும் வேலையில் இருக்கிறார். மிக விரைவில் நெஹ்சம் மறப்பதில்லை ரிலீஸ் என அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
