நீண்ட நாட்களுக்கு பிறகு இசைஞானியின் இசையில் பாடியிருக்கும் பிரபல பாடகர்

'எஸ்.என்.எஸ். மூவீஸ்' சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "தமிழரசன்". இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா கஸ்தூரி, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
கௌசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் பாபு யோகேஸ்வரன். பழனிபாரதி மற்றும் ஜெய்ராமின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, புவன் சந்திரசேகர் படத்தொகுப்பினை செய்திருக்கிறார். சண்டைப்பயிற்சியை அனல் அரசு மேற்கொள்ள, நடனத்தை பிருந்தா சதீஷ் கவனிக்கிறார். இப்படத்தின் கலையை மிலன் கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பாபு யோகேஸ்வரன் கூறியதாவது,
"படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக S.P.B ஒரு பாடலையும், 12 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன்.
படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
