Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நிவின்பாலியை இயக்கும் "புலி முருகன்" இயக்குனர் !

•On November 2, 2017
puli
Share
puli மோகன்லால் நடிப்பில், இயக்குனர் வைசாக் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் ‘புலி முருகன்’. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குனர் வைசாக், மம்முட்டியை வைத்து ஏற்கனவே இயக்கிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ராஜா-2’வை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்தப் படத்திற்கு மம்முட்டியின் கால்ஷீட்டும், பிருத்விராஜின் கால்ஷீட்டும் கிடைக்காமல் இருப்பதால் படம் இயக்க தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் அதற்குள் இன்னொரு படத்தை இயக்கிவிடலாம் என முடிவு செய்துள்ளார் இயக்குனர் வைசாக். தனது அடுத்தப் படத்தை நிவின்பாலியை வைத்து இயக்கவுள்ளாராம். இந்தத் தகவல் இயக்குனர் வைசாக்கின் கதாசிரியரான உதயகிருஷ்ணா உறுதி செய்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.