Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நிராகரிப்பான தீபா வேட்புமனு !

•On March 24, 2017
deepa 3
Share
deepa 3 ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டா வெறுப்பாக கடைசி நாளில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா வேட்பு மனு தாக்கல் செய்தார்.அதில் அவருக்கு மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடந்து வருகின்றது. அதில் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தீபா மனுதாக்கல் செய்த போது அவரது கணவர் பேட்ரிக் மாதவன் வங்கி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபா தாக்கல் செய்த மனுவில் அவரது கணவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவுடன், ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் கூடவே இருந்த அவரது கணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பேரவையை நிர்வகிப்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக தீபாவை விட்டு அவரது கணவர் மாதவன் விலகியுள்ளார். இந்நிலையில் வேட்பு மனுவில் கணவரின் பெயரும், அவரது வங்கி கணக்கு பற்றியும் குறிப்பிடவில்லை என அவரின் மனு நிராகரிக்கும் சூழல் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.