நிஜமாவே இது புத்தம்புது கதை! -தான் இயக்கும் படம் பற்றி சொல்கிறார் பாடகர் அருண்ராஜா காமராஜ்

பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். இந்தியப் பெண்கள் கிரிக்கெட்’டை மையமாக வைத்து கதை உருவாக்கியுள்ளார். இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் தொடாத கதைக்களம் இது!
படத்தின் கதைக்களம் பற்றி கேள்விப்பட்ட, இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் அருண்ராஜா காமராஜுக்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறார்!
‘‘தேவிகாவின் அறிவிப்பு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. அவரது உதவியை சந்தோஷமா ஏத்துப்பேன். அவரோட சப்போர்ட் என் படத்தோட தரத்துக்கும் விளம்பரத்துக்கும் மிகவும் உதவியா இருக்கும்!
இந்த படத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்’’ என்கிறார் அருண்ராஜா காமராஜ்!
இந்த படத்துக்கான நடிகைகள் தேர்வுக்காக பெரிய அளவில் ஆடிசன் நடத்தப்படவுள்ளதாம்! கிரிக்கெட் ஆடத் தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும்!Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
