Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நிச்சயமானது திருமணம்..! தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார்..? த்ரிஷா..!

•On November 17, 2014
trisha 1
Share

இது உண்மையிலேயே ஷாக்கான, ஆனால் இனிப்பான செய்திதான். த்ரிஷா திருமணம் செய்துகொள்ளப்போகிறார். மாப்பிள்ளை யார் தெரியுமா? வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் ஆகிய படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் வருண்மணியன் தான்.

அப்போ நடிகர் ராணாவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக இதுவரை வந்த செய்திகள்.... மூச்... நட்பையும் காதலையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. இத்தனை நாட்களாக திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த த்ரிஷா திருமணத்திற்கு சம்மதித்தே ஆச்சர்யம்..

ஆனால் இந்த தகவல்கள் வெளியானதும் இதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக த்ரிஷாவை தொடர்புகொன்டாலும், தயாரிப்பாளர் வருண்மணியனை தொடர்புகொண்டாலும் இருவருமே லைனில் கிடைக்கவில்லை.. அதனால் இது ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலாகவே இருக்கிறது.

கடந்த 2001 முதல் தொடர்ந்து நடித்துவரும் த்ரிஷா இன்னும் தமிழில் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். ரஜினி தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட த்ரிஷா இப்போது அஜித், ஜெயம் ரவி ஆகியோருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.