Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாளை மாலையுடன் ஓய்கிறது ஆர்.கே நகர் பிரச்சாரம்!..

•On April 9, 2017
R.k nagar
Share
R.k nagar சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் ஆர்.கே.நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. நாளை மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் வாக்காளர் அல்லாதோர் நாளை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது எனவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.