Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார் - துருவ் விக்ரம்

•On November 25, 2019
dhruv
Share

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் "ஆதித்யவர்மா". நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் "ஆதித்யவர்மா" படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது,

"என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

இசை அமைப்பாளர் ரதன் பேசியதாவது,

"என் அம்மாவிற்கு நன்றி. என் எல்லா மேடைகளுக்கும் அவர் தான் காரணம். ஏ.ஆர் ரகுமான் சாருக்கும் நன்றி. இந்தப்படத்திற்காக நாங்கள் வாங்குற ஒவ்வொரு க்ளாப்ஸும் விக்ரம் சாருக்குத் தான் சேரும். இந்தப்படத்திற்காக நாங்கள் உழைத்ததை விட விக்ரம் சார் தான் அதிகம் உழைத்தார். இயக்குநர் கிரிசாயா நல்ல என்கிரேஜ் பண்ற நபர். சவுரியா சாரும் விக்ரம் சாரும் இல்லாவிட்டால் இந்தப் புராஜெக்ட் வந்திருக்காது" என்று கூறினார்.

நடிகர் அன்புதாசன் பேசியதாவது,

"இந்தப்படம் என் கனவு மாதிரி. விக்ரம் சார், கிரிசாயா சார், துருவ் அனைவருக்கும் நன்றி. நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஒரு சோல் இருக்கு. அதை கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அதைச் சரியாக செய்திருக்கிறதாக நம்புகிறேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது" என்றார்

இயக்குநர் கிரிசாயா பேசியதாவது,

"தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். நவம்பர் 22-ஆம் தேதி ஒரு புது ஸ்டார் பிறந்திருக்கிறார். அதுதான் துருவ்" என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது, "படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரிசாயா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி" என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியதாவது,
"அர்ஜுன் ரெட்டி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அர்ஜுன் ரெட்டி ஸ்கிரிப்ட்டுக்காகத் தான் இந்த படத்திற்குள் வந்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, ஒரு நல்ல ஹீரோ இந்தப்படத்திற்குள் இருக்கிறார் என்று. 20+ல பெரிய ஹீரோ நம்மிடம் இல்லை. இப்போது துருவ் கிடைத்து விட்டார். அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. முகேஷ் சார் இப்படத்தை என்ஜாய் பண்ணி எடுத்திருக்கிறார். ஒரு விநியோகஸ்தரா நானும் என்ஜாய் பண்ணி விநியோகம் செய்தபடம் இது" என்றார்

நடிகர் விக்ரம் பேசியதாவது,

"இது அருமையான தருணம். ஒரு இதழில் விமர்சனம் எழுதி இருந்தார்கள். "துருவ் சியான் விக்ரமின் மகன் நேற்று. துருவின் அப்பா சியான் விக்ரம் இன்று சபாஷ்" என்று எழுதி இருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு தந்தைக்கு இதைவிட பெருமை இருக்க முடியாது. ஊடகங்கள் மொத்தமும் துருவை கொண்டாடியதற்கு ரொம்ப நன்றி. இந்தப்படத்தில் ஐந்து முக்கியமான விசயங்கள் இருக்கு. இப்படத்தின் மூலக்கதாசிரியர் சந்திப்பிற்கு முதல் நன்றி. துருவின் டப்ஸ்மாஷ் பார்த்துவிட்டு இவனால் நடிக்க முடியும் என்று நம்பி என் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் முகேஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை துருவால் நல்லா பண்ண முடியும்னு கான்பிடன்ட் இருந்தது. ரவி.கே சந்திரன் அவர்களுக்கும் நன்றி. அவர் ஒளிப்பதிவாளராக வந்ததால் படத்திற்கு பெரியபலம் கிடைத்தது. அன்புதாசன், இந்தப்படத்தோட இன்னொரு பலம். அவனும் சிறப்பாக நடித்திருந்தான். துருவை அடிக்கும் காட்சியில் திணறினான். பின் சரியாக செய்துவிட்டான். அன்புதாசன் பேசுற டயலாக்ஸ் எல்லாம் வினோத்மாரி எழுதியது. அவருக்கும் நன்றி. ராஜசேகர் நேர்த்தியான வசனங்கள் எழுதினார். நான் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன். மேலும் என் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. என் படம் அளவிற்கான எல்லா ரெஸ்பான்ஸையும் என் மகனுக்கும் கொடுத்திருந்தார்கள். அது ரொம்ப பெரிய விசயம். இந்தப்படம் கிரிசாயா இயக்கா விட்டால் இப்படி வந்திருக்காது. நான் கேட்ட எல்லா விசயங்களையும் செய்து தந்தார் தயாரிப்பாளர் முகேஷ் சார். இசை அமைப்பாளர் ரதனிடம் நீ பெரிய இசை அமைப்பாளராக வருவே என்று நான் சொன்னேன். அது நடக்கும். இந்தப்படத்தோட சோல் எல்லா உதவி இயக்குநர்களும். ஒட்டுமொத்தமாக எல்லா பத்திரிகை காட்சி ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.