Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நாங்கள் இணைவோமா? இல்லையா? ரஜினிகாந்த் குறித்து கமல் கருத்து..!

•On May 19, 2018
1513108822-RAJINIKANTH-KAMAL-HAASAN-e1523097243365
Share

ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் குறித்து பேசுகையில் ரஜினி ”இது அரசியல் படமல்ல அரசியல் பேசும் படம்” என தெரிவித்திருக்கிறார். சமீபகாலமாக ரஜினி கொடுத்துவரும் பேட்டிகள் மூலம் ,அவரது அரசியல் பிரவேசம் மட்டும் உறுதி என்பது தெரிகிறது. ஆனால் ரஜினி தனது கட்சி பற்றியோ, கொள்கை பற்றியோ, இதுவரை எந்த உறுதியான தகவலும் அளிக்கவில்லை.

இதற்கிடையே கமல் தனது ”மக்கள் நீதி மய்யம்” கட்சியை ஆரம்பித்து அதன் கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். சமீபத்தில் கமல் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது அவரிடம், ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கமல் இணைவாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த கமல், முதலில் ரஜினியின் கட்சி கொள்கைகள் என்ன என தெரியவேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் இணைவோமா? இல்லையா? என்பது பற்றி கூற முடியும். அதிலும் ரஜினி நடத்தப்போவது ஆன்மீக அரசியலாக இருந்தால், கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். என தெரிவித்திருக்கிறார் கமல். நாஸ்திகவாதியான கமலின் இந்த பதிலில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. என தெரிவிக்கிறது அவரது நட்பு வட்டம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.