Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம்!

•On November 6, 2017
ANNA_ARIVALAYAM
Share
ANNA_ARIVALAYAM மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகி நவம்பர் 8-ந் தேதியுடன் ஓராண்டாகிறது. நவம்பர் 8-ந் தேதி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றன. black தமிழகம் முழுவதும் நவம்பர் 8-ந் தேதி திமுகவினர் கருப்பு உடையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மழை பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 8-ந் தேதியன்று நடைபெறாமல் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.