Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நவம்பரில் அரசியலுக்கு வருகிறார் டுவிட்டர் ஆண்டவர்!

•On October 4, 2017
KAMAL_HAASAN
Share

KAMAL_HAASAN

டுவிட்டர் மூலம் அதகளம் செய்துக்கொண்டு அரசுக்கெதிராக தொடர்ந்து கேள்விக்கனைகளை தொடுத்துவரும், நெட்டிசன்களால் செல்லமாக ‘டுவிட்டர் ஆண்டவர்’ என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் தமது பிறந்த நாளான நவம்பர் 7-ல் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார். இந்த தகவலை இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் டெங்குவுக்கு எதிராக களப்பணியாற்றவும் கல்வி சார்ந்த நற்பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் கமல் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் அரசியல் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல்வாதிகள் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வரும் அவர் விரைவில் அரசியலுக்கு வந்ததே தீருவேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு என்பது அரசியல் பிரவேசம் குறித்தே இருக்கும் என தெரிகிறது. கமலின் பிறந்த நாள் நவம்பர் 7 ஆம் தேதி என்பதால் அடுத்த மாதம் தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.