நல்ல நடிகை எனப் பெயர் எடுக்க வேண்டும் - உபாசானா..!

'டிராபிக் ராமசாமி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் உபாசானா.
முதன் முதலில் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானவர் '88' என்ற படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 80 விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
'டிராபிக் ராமசாமி' படம் தனக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்துள்ளதாக உபாசானா பெருமையுடன் சொல்கிறார். "எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. அதனால் பரதநாட்டியம் டான்ஸ் கத்துக்கிட்டேன்.
அப்பா அம்மா பிறந்தது வங்காளம், நான் பிறந்தது குஜராத், படித்தது கர்நாடகா, இப்போது வாழ்வது தமிழ் நாட்டில். ஆக, இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர். அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போது என் கூட இருக்கிறார்.
நான் ஒரு சாப்ட்வேர் இஞ்சினீயர். 2015ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன். நான் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும். சித்தார்த்தை ரொம்ப பிடிக்கும். நானும் டான்ஸர் என்பதால் நடிகர் விஜய்யின் டான்ஸை விரும்பி ரசிப்பேன்.
நகர பெண்களை கிராமத்துக்கு அழைத்துச் சென்று நடத்தி. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வில்லா டூ வில்லேஜ்' எனக்கு மிகப் பெரிய அந்தஸ்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு Real Fighter என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது பெருமையாக இருக்கு. அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் 'கருத்துக்களை பதிவு செய்' எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்.
நான் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள 'டிராபிக் ராமசாமி' படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு," என்கிறார் உபாசானா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
