நயன்தாரா.. அடுத்து த்ரிஷா.. சுக்கிரதிசையில் ஜெய்..!

வீடுகளில் சிறுவயது பையன்களைக் குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தும் வார்த்தைதான் ‘பொடியன்’. சிலநேரங்களில் வளர்ந்த வாலிபனைக்கூட அவன் ஒன்றும் தெரியாதவன் என்று கிண்டல் பண்ணுவதற்கும் இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவது உண்டு.
உதயம் என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன், அடுத்து தான் இயக்கவிருக்கும் படத்திற்கும் ‘பொடியன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார். இதில் பொடியனாக நடிப்பவர் ஜெய். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட்டில் ஆரம்பிக்க இருக்கிறது.
இந்தப்படத்தில் ஜெயக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெய்யுடன் நடிக்க த்ரிஷாவுக்கு விருப்பம் இருந்தாலும் ஜூலையில் அவரிடம் தேதிகள் இல்லாததால் தான் அடுத்தமாதம் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்துள்ளார்களாம். நயன்தாராவுடன் நடித்த அதிர்ஷ்டத்தின் ஈரம் காய்வதற்குள் த்ரிஷா புயல் வந்து ஜெய்யை அட்டாக் பண்ணிவிட்டது. ஜெயக்கு சுக்கிரதிசை தான்.
இந்தப்படம் பற்றி மணிமாறன் கூறும்போது, “பொதுவாக ஒருவனை அவன் பலம் தெரியாமல் குறைத்து மதிப்பிடுவதற்குத்தான் ‘பொடியன்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப்படம் வெளியாகும்போது அதற்கான அர்த்தமே வேறுவிதமாக மாறப்போகிறது” என்கிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
