“நண்பேன்டா” – ராஜேஸுக்கு கைகொடுத்த ஆர்யா..!

ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வளர்ந்துவரும் நடிகர்களுக்கும்
இயக்குனர்களுக்கும் சோதனைகள் ஏற்படவே செய்யும். அப்போது அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி தங்களை நிரூபிக்க தயாராவார்கள். அந்த நேரத்தில் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையோ, அல்லது தான் ஹிட் கொடுத்து கைதூக்கிவிட்ட நடிகர்களையோ தேடிப்போவதும் சகஜமான நிகழ்வுதான்.
அப்படி ஒரு சூழ்நிலை இயக்குனர் ராஜேஸுக்கும் ஏற்பட்டுள்ளது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் “நான் இருக்கிறேன் நண்பா” என ராஜேஸின் படத்தில் நடிக்கவும் ஏன் படத்தையே தனது ஷோ பீப்பிள் நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் முன் வந்திருக்கிறார் ஆர்யா., இருக்காதா பின்னே.. பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் ஆர்யாவின் கமர்ஷியல் மார்க்கெட் வேல்யூவை ஏற்றியவர் ராஜேஸ் தானே..?
இந்த புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவும் கூடவே ராஜேஸின் வலதுகரமான சந்தானமும் கைகொடுக்க, தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் ராஜேஸ். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
