‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வெளியீடு!

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரிப்பில் சிவா அரவிந்த் இயக்கத்தில் தரண் இசையில் விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ள படம் தான் ‘நட்புனா என்னானு தெரியுமா’.
இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம். இந்த விழா வரும் நவ-12ஆம் தேதி மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது.
உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து வாருங்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எஞ்சாய் பண்ணுங்கள்.
பரிசுப்பொருட்கள் விபரம்
• 32 கிராம் தங்க காசுகள்
• 6 நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் (விமானம், சாப்பாடு வசதி உட்பட) – 2 நபர்களுக்கு
• சாம்சங் s8 போன்
• சோனி ஹோம் தியேட்டர் 4100
• சோனி டிவி 4k (50 இன்ச்)
• பிளேஸ்டேஷன் – 4 (4 ஜாய்ஸ்டிக்குகளுடன்)
• டெல் i5 மாடல் 7567 (8gb ram 1 TB hard disk, etc..) Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
