Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடிகை நஸ்ரியா சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாரா?

•On April 1, 2017
Nazriya-Fahad-Wedding
Share
Nazriya-Fahad-Wedding நடிகை நஸ்ரியா சினிமாவில் சில தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும், குறைந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையானவர் நஸ்ரியா. ஆனால் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட அவர், கேரளாவில் செட்டிலானார் . திருமணம் முடிந்ததிலிருந்து ,தற்போது வரை நஸ்ரியா எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு அவரது கணவர் பகத் பாசில் தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இவ்வாறு கூறப்பட்ட குற்றச்சட்டுகளுக்கு பகத் பாசில் விளக்கமளிக்கிறார். என்னிடம் பலரும் நடிகை நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவாரா என்று கேட்கின்றனர்.சிலர் அவர் சினிமாவில் நடிக்காமல் இருபதற்கு நான் தான் காரணம் என்றும் கூறுகின்றனர். கண்டிப்பாக வருவர் அவருக்கு தகுந்த கதாபாத்திரம் அமைந்த பின்னர் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிப்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. நஸ்ரியா மீண்டும் எப்போது நடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறாரோ அப்போது கண்டிப்பாக படங்களில் நடிப்பார். அப்போது நான் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி, எனது வீட்டை பார்த்துக் கொள்வேன்.” என பகத் பாசில் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.