Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நடனத்தை பார்த்து சினிமா உலகினர் பாராட்டு-மணியார் குடும்பம் நாயகன் "உமாபதி ராமைய்யா"..!

•On July 3, 2018
Event Pics (51)
Share

நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யா. அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அறிமுகமானார். தற்போது தம்பி ராமைய்யா இயக்கத்தில் மணியார் குடும்பம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

உமாபதி சிறப்பாக நடனமாடக்கூடியவர். கிட்டத்தட்ட பிரபுதேவா ஆடுவது போன்று கால்களை வளைத்து நெளித்து மணியார் குடும்பம் படத்தில் அவர் ஆடியுள்ள நடனத்தை பார்த்து சினிமா உலகினர் பாராட்டி வருகிறார்கள்.அதோடு, அடுத்தபடியாக தான் இன்னும் அதிடி நடனமாட விரும்புவதாக தன்னை வைத்து படம் இயக்கயிருக்கும் டைரக்டர்களிடம் கூறி வரும் உமாபதி, தான் நடனமாடியுள்ள சில வீடியோக்களையும் டைரக்டர்களிடம் காண்பித்து அவர்களை அதிர வைத்து வருகிறார்.

காரணம் அந்த வீடியோவில், விஜயகாந்த் சண்டை காட்சிகளில் சுவற்றில் வேகமாக ஏறிச்சென்று வில்லனை பாய்ந்து தாக்குவது போன்று இவர் நிஜமாலுமே டூப் இல்லாமல் நடனமாடியிருக்கிறாராம். ஆனபோதும், ஹீரோவாக நடிப்பவர் டூப் இல்லாமல் தானே இந்த மாதிரி செய்யும்போது சில சமயங்களில் விபத்து ஏற்பட்டால் அதன் பிறகு படம் மாதக் கணக்கில் தாமதமாகிவிடும். அதனால் இதுபோன்ற விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம் என்று டைரக்டர்கள் அவரை கேட்டுக்கெண்டு வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.