Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் - கமல்ஹாசன் அதிரடி..!

•On October 15, 2018
d85b27cc53fff87f2551a32c2d4bc76f
Share

தேவர் மகன் 2 படம் எல்லா சாதிக்கும் எதிரான படமாக இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக நிறைய கூட்டங்களையும் நடத்திவிட்டார்.

அதே சமயம் சினிமாவிலும் தேவர் மகன் 2 , இந்தியன் 2, சபாஷ் நாயடு என்று மிகவும் பிசியாக உள்ளார். இந்த நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

அதில், தேவர் மகன் - 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம். தேவர் மகன் - 2 ஒரேயொரு சாதியை எதிர்க்கும் படம் கிடையாது. சாதி வேண்டாம் என்று நோக்கத்தில்தான் இந்த படம் எடுக்கப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதை தடுக்க முடியாது.

எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது. என்னை தமிழக அரசியல்வாதிகள் கவனித்து வருகிறார்கள். அமைச்சர்களின் பேட்டியை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு.

பாலியல் குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும். பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் உள்ளது. புகார்கள் வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது, என்று கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.