Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேசிய விருதுகள் பெற்ற தமிழ் திரைப்படங்கள் !..

•On May 4, 2017
joda24
Share
joda24 புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது. மேலும் பாடலாசிரியர் வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும். இயக்குனருக்கு விருது சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ். ஆர்.பிரபு இயக்கிய இயக்குனர் ராஜூமுருகனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 24 படத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்காகவும் விருது வழங்கப்பட்டது. விமர்சகருக்கான விருது தனஞ்செயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடன இயக்குனராக ராஜூ சு்நதரம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. தெலுங்கு படமான ஜனதா கேரஜ் படத்தில் சிறந்த நடனம் அமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.