Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தெலுங்கு ரீமேக்கில் "இரும்புத்திரை" நாயகன் !

•On March 23, 2018
vishal
Share

தெலுங்கில் வெளியான 'டெம்பர்' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட்மோகன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

தமிழில் ரீமேக் ஆகும் இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நடிக்கவுள்ளனர். தற்போது ராஷி கண்ணா "இமைக்கா நொடிகள்" படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை "லைட் அவுஸ் மூவிமேக்கர்ஸ்" நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். 'டெம்பர்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தபின் தொடங்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.