Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தெருவில் இறங்கி சண்டை போட லட்சுமி மேனன் தயார்..!

•On August 4, 2014
siva- lakshmi
Share

இந்த 2014ல் எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பாக லட்சுமி மேனனுக்கு இதுவரை மட்டுமே நான்கு படங்கள் ரிலீசாகியுள்ளன. அதிலும் கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் தமிழில் ‘ஜிகர்தண்டா’வும் மலையாளத்தில்avatharam ‘அவதாரம்’ படமும் வெளியாகி அவரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன.

தற்போது தமிழில் கவுதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’, கார்த்தியுடன் ‘கொம்பன்’ என லட்சுமிமேனன் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. இப்போது புதிதாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

படத்தில் இவர் கேரக்டரும் இவர் மற்ற படங்களில் நடித்ததில் இருந்து வித்தியாசப்படும் கேரக்டராம்.. இந்தப்படத்தில் தெருவில் இறங்கி மற்றவர்களுடன் குழாயடி சண்டை போடும் வாயாடிப்பெண்ணாக நடிக்கிறார் லட்சுமி.. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குனர் பொன்ராம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.