Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தென் தமிழகத்தில் இடி, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் – 5 நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை

•On April 7, 2018
5
Share

தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மைய அறிக்கை கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியினால் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 7 முதல் 11 வரை மழை, வெப்பம், வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். தென் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ஏப்ரல் 8ஆம் தேதியான நாளை தமிழகம் புதுச்சேரியில் இடி, சூறைக்காற்றோடு கூடிய கனமழை பெய்யும். 9,10,11ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

வெப்பநிலையை பொறுத்தவரை பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.