Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக 19 வயது மாணவி இசையமைத்திருக்கும் படம் "ஆண்டனி"

•On November 10, 2017
antony
Share
antony இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் தான் 'ஆண்டனி'. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள "ஆண்டனி" படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார். சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த "ஆண்டனி" படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது. மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள "ஆண்டனி" படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். இந்த 19 வயது மாணவி இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது நம் தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை "ஆண்டனி" அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.