"தீரன் அதிகாரம் ஒன்று " திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளியிடு!

இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "தீரன் அதிகாரம் ஒன்று " திரைப்படம் படபிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் வெளியிட்டை ஆகஸ்து மாதம் ஒத்தி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'காற்று வெளியிடை'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏப்ரல் 7-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜெய்ஸால்மர் பகுதியில் சில பிரதான காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து பூஜ் பகுதியில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளை காட்சிப்படுத்தவுள்ளார்கள்.
பூஜ் நெடுஞ்சாலையில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படம் ரசிகர்களின் பார்வையில் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். மொத்த படப்பிடிப்பும் முடிந்து, ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
