தினகரன் அணியில் மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள்!

புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தினகரன் அதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று நாட்களாக 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ரிசார்ட்டில் உள்ள அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்திக்க டி.டி.வி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார். இன்று மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி ரிசார்ட்டிற்கு வர உள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து தமிழக அரசியலில் இன்று மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
