தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்த நடிகை நமிதா!...

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, தற்போது ஆர் கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக நடிகை நமிதா மற்றும் விஜயசாந்தியை பிரச்சாரம் செய்ய அழைத்தும், அவர்கள் வர மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா அதிமுகவின் பொறுப்பை ஏற்ற போது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர் நடிகை விஜய சாந்தி. அதோடு தொலைக்காட்சியிலும் ஆதரவாக பேசினார். அதேபோல் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் இணைந்தவர் நடிகை நமிதா.
நமிதா மற்றும் விஜயசாந்தி அதிமுக., பக்கம் இருந்ததால், தற்போது நடக்க உள்ள இடைத்தேர்தலுக்கு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் விஜயசாந்தி இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றாராம். அதே போல் நமிதா அதெல்லாம் வரமுடியாது என மறுத்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇனி வாட்ஸ்அப்பில் பணபரிமாற்றம்...
