திடீரென ஏற்பட்ட பள்ளத்தாள் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. சாலை மார்க்கமாக சில பகுதிகளில் முழு பணிகளும் முடிவுற்று தற்போது ரெயில் சேவை நடைபெற்று வந்தாலும், சுரங்கம் அமைத்து அதில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறன.
இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா சாலையில் திடீரென நடுரோட்டில் பள்ளம் உருவானது. அதன் வழியாக சிமெண்டு கலவையும் வெளியானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே, அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து வாகனங்களை ஒரு பக்கமாக அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ பணியாளர்கள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கீழே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் திடீரென இப்படி பள்ளங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
