Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தவறான பெண்ணுடன் காதல்...! சிக்கலில் ஜித்தன் ரமேஷ்..!

•On July 14, 2014
Jithan 2
Share

‘ஜித்தன்’ ரமேஷுக்கு திகில் படங்களில் நடிப்பதுதான் ரொம்பவும் பிடிக்கும் போல..! ‘ஜித்தன்’ என்கிற திகில் படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜித்தன்-2’ திகில் படத்திலும் நடித்துவரும் ரமேஷ் இன்னுமொரு திகில் படத்திலும் நடிக்க இருக்கிறார்.. படத்தின் பெயர் ‘பெருந்திணை’.

இப்படி இலக்கியத்தரமான பெயரை வைத்துள்ள இந்தப்படத்தின் அறிமுக இயக்குனர் சிரில் பெர்னார்டு, இது திகில் மட்டுமல்லாமல் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த குடும்பப்படமாக இருக்கும் என்கிறார். இந்தப்படத்தில் ஜித்தன் ரமேஷ் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ஒரு தவறான பெண்ணிடம் ஒரு இளைஞன் காதலில் விழும்போது அவனுக்கு மட்டுமல்லாது அவனது குடும்பத்திற்கும் என்ன நிகழ்கிறது என்பது தான் படத்தின் மையக்கதையாம். இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.