Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தளபதியின் மெர்சல் படத்தில் பாடிய ஜி.வி!

•On June 26, 2017
GV
Share
GV தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இசைப்புயலின் பாடலுக்கு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு குரல் கொடுக்கிறார் ஜி.வி.பி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் விரும்பும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் அண்ணாவின் மெர்சல் படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.