Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"தல 59"-ல் ‘விக்ரம் வேதா’ புகழ் ஷரதா ஸ்ரீநாத்..!

•On December 29, 2018
tamil-actress-shraddha-srinath-photoshoot-pics-247ebd5
Share

‘விவேகம்' படத்திற்கு பிறகு அஜித் கைவசம் சிவாவின் ‘விஸ்வாசம்' மற்றும் இயக்குநர் வினோத் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் வினோத் படம், அஜித்தின் கேரியரில் 59-வது படம். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP' நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படம் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்' (Pink) படத்தின் ரீமேக்காம். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான இப்படத்தில் அமிதாப் பச்சன், டாப்சி நடித்திருந்தனர். தமிழ் வெர்ஷனுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள்.

மேலும், நடிகைகள் நஸ்ரியா மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, முக்கிய வேடத்தில் நடிக்க ‘விக்ரம் வேதா' புகழ் ஷரதா ஸ்ரீநாத்திடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.