Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தல அஜித்தின் 'விவேகம்' பட கதை இதுதானாம்!

•On August 21, 2017
vivegam 4
Share
vivegam 4 சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் விவேகம். படம் முழுக்க முழுக்க பல்கேரியா மற்றும் அதை சுற்றியுள்ள சில நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் வெளிநாட்டு சதியை முறியடித்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து வரப்போகிறது. இதனை தொடர்ந்து சில பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறுகிறது. ரா தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு ரகசிய குழு அமைக்கப்படுகிறது. அதன் தலைவர் தான் அஜித். இந்த மிஷனில் அஜித் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் விவேகம் படத்தின் கதை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகம் உள்ளதாம். அதோடு, அஜித் உள்பட அனைத்து நடிகர் நடிகைகளுமே ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற காஸ்டியூம்களில் தான் நடித்திருக்கிறார்களாம். அதனால் ஆங்கில படம் பார்த்த பீலை விவேகம் கொடுக்கும் என்கிறார்கள். விவேகம் படம் வருகிற ஆக., 24-ம் தேதி ரிலீஸாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.