Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவாரா செளந்தர்யா?

•On July 19, 2017
Ajith
Share
Ajith சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘விஐபி 2’ படம் இம்மாதம் 28ம் தேதி வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. செளந்தர்யா ரஜினிகாந்த் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது: நீங்கள் எந்த நடிகரை வைத்து இயக்க ஆர்வமாக உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, அவர் ‘அஜித்’ என பதிலளித்துள்ளார். அஜித்துக்காக ஒரு மாஸ் கதையை தயாராக வைத்துளதாகவும். விரைவில் அதை அவரிடம் கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அஜித்திடம், இதுகுறித்து கேட்டபொழுது, அவர் பதிலுக்கு வெறும் புன்னகையை மட்டும் பதிலாக்கி சென்றுவிட்டார். இருப்பினும் விரைவில் அஜித்-செளந்தர்யா சந்திப்பு நடக்கும் என்று தெரிகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.