தமிழில் மொழி மாற்றம் செய்து வெளிவரும் ‘புலி முருகன்’ அசத்தல் ட்ரைலர்...

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் புலி முருகன். அதில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகபதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரபல இயக்குநர் வைஷாக் இயக்கியிருந்தார். இப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.35 கோடி மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது.
அதன் மூலம் மலையாளத்தில் வெளியான படங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தமிழ் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
https://youtu.be/XBXw2VHLrn0Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
