Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழக வீரர் அஷ்வின் செய்த புதிய சாதனை..!

•On June 16, 2018
test match ashwin
Share

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தமிழக வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்தியாவுடன் மோதியது. பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், முரளி விஜய் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினர்.

முதல் இன்னிங்சில் 4 மற்றும் 2வது இன்னிங்சில் 1 விக்கெடுகள் என மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் அஷ்வின். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி, அஷ்வின் ஆடிய 58வது டெஸ்ட் போட்டி. இதன் மூலம், இந்திய அணிக்காக அதிகமான டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரர் என்ற பெருமையை அஷ்வின் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழகத்தை சேர்ந்த வெங்கடராகவன், 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே சாதனையாக இருந்தது. தற்போது அதை அஷ்வின் முறியடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் முரளி விஜயும் 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.