Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழகத்திற்கு ஜிஎஸ்டியால் நல்ல பலன்: பட்ஜெட் தாக்கலில் பன்னீர்செல்வம்!

•On March 15, 2018
ops 2
Share
ops 2 தமிழக சட்டசபையில் 2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தாக்கல் செய்த உரை:- மாநிலத்தில் நிலவி வந்த மந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு 2017- 2018ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி ஓரளவு உயர்ந்துள்ள நிலையில், 2018-19ம் நிதியாண்டில் இது மேலும் உயரும் என்று கருதப்படுகிறது. தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சுழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது. பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017 மாதம் ஜூலை 1 முதல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புகளின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை 5 ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்யும். ஜிஎஸ்டியின் கீழ் 2017 ஜூலை முதல் பிப்ரவரி 2018 வரை ரூ. 632 கோடி இழப்பீடாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.